திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:22 IST)

7,ஆம் வகுப்பு படிக்கும் 12,வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாயவன், இவரது மகன் நந்தகுமார்.(வயது 24). இவர் கூலி வேலை செய்து வருகிறார். 
 
கோவிந்தாபுரம் அர்ஜுன தெருவை சேர்ந்த. பிரசாந்த்குமார் இவருக்கு 7, ஆம் வகுப்பு படிக்கும்  12, வயதில் சிறுமி உள்ளார். அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
 
மேலும்
சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியின் பின்புறத்தில் வந்து கண்களை பொத்தி சிறுமியிடம் ஆபாச வார்த்தைகளை கூறிய நந்தகுமாரின் தனது  மர்ம உறுப்பை சிறுமியிடம் காண்பித்ததாகவும் அப்போது சிறுமி தன் கைகளால் கண்ணை மூடிக் கொண்ட போது உன்னை எனக்குப் பிடிக்கும் நம்ம ஈஸ்வரன் கோவிலுக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னதாகவும், சிறுமி நந்தகுமாரை தள்ளிவிட்டு தனது வீட்டிற்கு ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
 
இது குறித்து
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மபிரியா, நந்தகுமார் மீது.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து
நந்தகுமாரை கைது செய்து  நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்