திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (11:07 IST)

திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதட்டம்..!

bomb threat
திருச்சியில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட சில இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் எடுக்கப்பட்ட நிலையில், அது பொய்யானது என்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ராஜன் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வெடிகுண்டு நிமிட சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சோதனைக்கு பின்னர் மீண்டும் இது ஒரு பொய்யான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபரை தேடும் பணியில் சைபர் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Edited by Mahendran