செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (10:05 IST)

துணை முதல்வருக்கு சொந்தமான திரையரங்கில் ஆபாசப்படமா? கர்நாடகாவில் பரபரப்பு..!

TK Sivakumar
கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சொந்தமான திரையரங்கில் ஆபாச படம் திரையிட்டதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டிய நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு டி கே சிவகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.  

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது  கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளில் ஆபாச படம் திரையிடப்படுவதாகவும் குறிப்பாக டி கே சிவகுமாருக்கு சொந்தமான திரைப்படங்களில் ஆபாச  படங்கள் திரையிடப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த டிகே சிவகுமார் , குமாரசாமி முன்னாள் முதல்வர் என்ற தகுதியை இழந்துவிட்டார் என்றும் அவர் என் தொகுதிக்கு போய் நான் எந்த திரைப்படங்களை திரையிட்டேன் என மக்களின் மக்களிடம் கேட்டுக் கொள்ளட்டும் என்றும் இன்றைக்கும் எனக்கு சொந்தமான திரையரங்குகளில் என்ன படம் ஓடுகிறது என பார்த்துவிட்டு வந்து பேச வேண்டும் என்றும் ஆபாச படங்களை காட்டி இருந்தால் மக்கள் என்னை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருப்பவர்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் நான் சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருந்தால் அதை குமாரசாமி நிரூபிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அவர் நிரூபித்து விட்டால் அரசியலை விட்டு விலக நான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran