1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:27 IST)

பெங்களூரில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கர்நாடகம் மாநிலத்தில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி  நடந்து வருகிறது.
 
இங்கு பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  அதாவது, இமெயில் மூலம் மர்ம நபர் இப்பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
 
விரைந்து பள்ளிக் கூடத்திற்குச் சென்ற போலீஸார் பள்ளியில் இருந்து  மாணவ, மாணவியரை வெளியேற்றி, சோதனை நடத்தினர்.  
 
இச்சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என கண்டுபிடித்தனர்.
 
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று  அம்மாநில துணை முதல்வர்  டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.