1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bjp srinivasan says about vijay neet speech

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

neet exam
தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தேவையென்றால் விஜய் தனது செல்வாக்கை பயன்படுத்தி நீதிமன்றம் சென்று விலக்கு பெறலாம் என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஜய் இன்று கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய போது நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். முதல்முறையாக அவர் ஒரு பொது பிரச்சினையை பற்றி பேசி உள்ளார் என்பதும் குறிப்பாக மாணவர்களின் பிரச்சனையாக நீட் தேர்வு பிரச்சினையை பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுக திமுக உட்பட பல கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விஜய் பேச்சு குறித்து பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் கூறிய போது ’விஜய் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!