சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்த ஒரு மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையில் சமூக அமைப்பு என்றும் நாராயண குரு சனாதன தர்மத்தின் பேச்சாளராகவோ அல்லது பயிற்சி செய்பவராகவோ இல்லை என்றும் ஆனால் அதை புணரமைத்து புதிய யுகத்திற்கு ஏற்ப தர்மத்தை பிரகடனப்படுத்திய ஒரு துறவி என்றும் பேசினார்.
புதிய யுகமான மனிதநேய தர்மம் காலத்துடன் இருக்கிறது என்றும் சனாதன தர்மத்தின் கட்டமைப்பில் நாராயண குருவை நிலைநிறுத்த முயற்சிப்பது அவரை அவமதிக்கும் செயலாகும் என்றும் கூறினார். மேலும் நாராயண குரு மதமும் இல்லை ஜாதியும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் யாராவது ஒரு குருவை சாதி அல்லது மதத்தின் எல்லைக்கு கொண்டு வர முயன்றால் அதைவிட அவரை அவமதிக்க யாராலும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்வர் சனாதன வெறுப்பை கைவிட வேண்டும் என்றும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதன் தொடர்ச்சி தான் இது என்றும் பாஜக கூறியுள்ளது.
Edited by Mahendran