திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (16:50 IST)

சுகி சிவத்தை மறித்து பாஜகவினர் போராட்டம்: கால்களில் விழுந்து சமாதனப்படுத்தியதால் பரபரப்பு..

suki sivam
ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவத்தை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டக்காரர்களின் கால்களில் விழுந்து சமாதானம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சமய சொற்பொழிவாளர் சுகி சிவத்தை எதிர்த்து போராட்டம் செய்த பாஜக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இங்கு நடந்த கம்பன் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சமய சொற்பொழிவாளர் சுகிசிவம் சென்றபோது அவரை வழிமறித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினார். இந்துக்களுக்கு எதிராக சுகி சிவம் பேசி வருவதாகவும் அவர்கள் முழக்கமிட்டனர். 
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கால்களில் விழுந்து கம்பன் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாஜகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் காரணமாக காரைக்குடியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran