வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (12:52 IST)

கவுதமி விலகியது மன வேதனையை அளித்துள்ளது; வானதி சீனிவாசன் பேட்டி

நடிகை கவுதமி மீது எனக்கு அதீதமான அன்பு, பாசம் உண்டு என்றும், அவர் கட்சியில் இருந்து விலகியது மன வேதனையை அளித்துள்ளது என்றும்பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
 
எந்த அளவுக்கு அவர் கட்சியை நேசித்தார் என்பது எனக்கு தெரியும், தான் ஒரு சினிமா நட்சத்திரம், எங்கே சென்றாலும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஒரு போதும் கேட்டதில்லை. கட்சிப் பணிகளில் அடிப்படை தொண்டரை போல் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது கடிதம் எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது;
 
கவுதமி வழக்கு கொடுத்து இருக்கிறார், சட்டத்துக்கு புறம்பாக நாங்கள் யாரையும் பாதுகாக்கப்போவதில்லை, நிச்சயமாக மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேசுவேன், என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன் என  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Siva