செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (23:48 IST)

ஓட்டலில் தோசையைக் கிழித்த பாஜக வேட்பாளர் ...பிரபல நடிகை பாராட்டு

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

இந்நிலையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி அக்கட்சி வேட்பாளர்களுக்கான தீவிரப்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வினோத்தை ஆதரித்து நடிகை கவுதமி, சிவாஜியின் பேரன் துஷ்யந்த், ஆகியோருடன் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது ஒரு ஓட்டலில் நடிகை கவுதமி வினோத்தை தோஷை சுடும்படி கூறினார். ஆனால் வினோத் தோசையை திருப்பிப்போடும்போது அது கிழிந்து கந்தலானது. அவரது இந்த முயற்சியை = அனைவரும் பாராட்டினர்.