தொடர்புடைய செய்திகள்
- ''விஜய்யின் கட்சி பெயர் நன்றாக இருக்கிறது'' ....நடிகர்களை வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்- முஸ்லிம் லீக் காதர் மொய்தீன்
- சிவசேனா எம்.எல்.ஏ.வை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க.எம்.எல்.ஏ.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!
- ஜெகன்மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா- ''யாத்ரா 2''பட டிரைலர் ரிலீஸ்!
- மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தேர்தல் அறிக்கை பரிந்துரை பகிருங்கள்.! மக்களிடம் கருத்து கேட்கிறது திமுக.!!
முன்பு தோழமையுடன் இருந்தோம் இன்று எதிரியாக இருக்கிறோம்.! யாரைப் பற்றி சொல்கிறார் ஜெயக்குமார்.!!
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவின் பெயரை சொல்வதற்கு திமுக-விற்கு எந்த தகுதியும் இல்லை என்றார். தேர்தல் நெருங்கக் கூடிய சூழலில் ஏற்கனவே அனைத்து பணிகளும் பொதுச் செயலாளர் தலைமையில் இளைஞர் அணி பாசனை பிரச்சாரக் குழு தேர்தல் அறிக்கை குழு உள்ளிட்ட அனைத்து குழுக்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றன என்றும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இன்னும் தேர்தல் வர ஒரு மாதமே உள்ள சூழலில் விரைவில் கூட்டணி குறித்து அறிவித்து வெளியிடப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை
தொடங்கி இருப்பதற்கு காரணம் அந்த கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறிவிடும் என்ற பயம் தான் என்று அவர் விமர்சித்தார்.
பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த ஜெயக்குமார், எங்களைப் பொறுத்தவரை முன்பு தோழமையுடன் இருந்தோம் இன்று எதிரியாக இருக்கிறோம் என்றும் கூறினார்.
