திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (19:31 IST)

ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஒடிஷா செல்லும் பாஜக உதவிக் குழு!

Annamalai
ஒடிசா ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ள நிலையில்,  ’ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர பாஜக குழு அங்கு செல்லவுள்ளதாக’ அக்கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தாவின்  ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) சென்னை நோக்கி வந்தபோது, ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் தடம்புரண்டு  மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததில், பெங்களூரில் இருந்து கொல்கத்தா  நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு, கோரமண்டல் விரைவு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்தக்  கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து  நடைபெற்ற பகுதிக்கு அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு  இருவரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ’’ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வரவும், அவர்களுக்குத் தேவையாக உதவிகள் செய்யவும் தமிழக பாஜக சார்பில் குழு ஒடிஷா செல்லவுள்ளது’’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.