வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 21 ஜூலை 2021 (19:39 IST)

பழைய 5 பைசாவுக்கு பிரியாணி..முந்தியடித்த மக்கள் !

கடந்தாண்டு கொரொனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கொரொனா இரண்டாம் அலை தொற்று வேகமாகப் பரவிப் பின்னர் குறைந்த நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மதுரைவில் பழைய 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படுமென ஒரு புதிய திறப்பு விழாவுக்கு வித்தியாசமாக விளம்பரம் செய்யப்பட்டது.

இதையடுத்து, மக்கள் பழைய 5 பைசாவுடன் வந்து குவிந்தனர். இதனால் கடைக்காரர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்படவே கடைக்கார்கள் ஷட்டரை இழுத்து மூடிவிட்டனர்.
விரைவில் 3 ஆம் அலைப் பரவல் தொடங்கவுள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில் இப்படி சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.