ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (20:09 IST)

பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தக் கூடாது- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இளைஞர்கள் சிலர்  சாலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சமீபத்தில் டிடிஎஃப் வாசன் உள்ளிட சிலர் சாலையில்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து, அவர்களின் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
 
இந்த நிலையில்,பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தக் கூடாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
 
சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிப்., சாதிக் இருவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
 
இந்த வழக்கில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தக் கூடாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.