1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (15:55 IST)

தமிழ்த்தாய் வாழ்த்தின் வரியை மாற்ற வேண்டும்: பாரதிராஜா

Bharathiraja
தமிழ் தாய் வாழ்த்தில் இருக்கும் ஒரு வரியை மாற்ற வேண்டும் என பிரபல இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 
 
இயக்குனரை இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா, கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 
 
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, ‘எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என்ற வரியை மாற்ற வேண்டும். 
 
ஏற்கனவே எத்திசையும் புகழ் மணக்க இருந்த தமிழ் இப்போ இல்லையா? என்று கேள்வி எழுவதால், எத்திசையும் புகழ் மணக்க இருக்கின்ற தமிழே என மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
 
Edited by Mahendran