ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (20:50 IST)

பாரதிராஜாவின் முன்ஜாமீன் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தேசத்துக்கு விரோதமாக பேசியதாகவும், இந்த போராட்டத்தின்போது போலீசாரை தாக்க தூண்டியதாகவும் இயக்குனர் பாரதிராஜா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தப்போது இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2 வழக்குகளில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
இயக்குனர் பாரதிராஜா திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.