தமிழக மருத்துவமனைகளில் 85% படுக்கைகளில் கொரோனா நோயாளிகள் என தகவல்!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 85% படுக்கைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
தமிழகத்தில் தினமும் 14 ஆயிரத்துக்கும் மேலும் சென்னையில் நான்காயிரத்திற்கும் மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனையில் 60% படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும் தனியார் மருத்துவமனையில் 85 சதவீத படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்கனவே ஆயிரத்து 800 படுக்கைகள் உள்ள நிலையில் புதிதாக 750 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது
ஏற்கனவே 13 கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அத்திப்பட்டி என்ற பகுதியில் 6 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கட்டடம் பயன்பாட்டில் உள்ளது. கூடுதலாக கொரோனா மையங்கள் அமைப்பதற்கான கல்லூரிகள் அரசு கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவை விரைவில் கொரோனா மையங்களாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது