மெரீனாவில் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மெரீனாவில் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டும் இன்று காலை முதல் தொடர்ச்சியாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை சாலைகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக மெரினாவில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது
அதே போல் அடையார் திருவான்மியூர் கடற்கரைகளிலும் மழை நீர் கடற்கரையை ஒட்டியே தேங்கியுள்ளதால் மெரினாவில் வெள்ளக்காடுபோல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் மெரினாவில் ஏற்கனவே பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் அடையாறு திருவான்மியூர் கடற்கரைக்கு மக்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர் இதனையடுத்து அடையாறு திருவான்மியூர் கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது