1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bank account compulsory for ration card users

ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழக அரசு

Ration Card
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பதாகவும் அவர்கள் உடனடியாக மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அனைத்து ரேஷன் கடை நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ரேஷன் அட்டை பயனாளிகள் வங்கி கணக்கு இல்லாமல் இருந்தால் அவர்களை உடனடியாக மத்திய கூட்டுறவு வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் வங்கி கணக்கை தொடங்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
மேலும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கு எண் வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றை ரேஷன் கடை ஊழியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி