வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (09:34 IST)

சாவை முன்கூட்டியே உணர்ந்த பங்காரு அடிகளார்! தனக்கு தானே சமாதி கட்டிக் கொண்ட சம்பவம்!

Bangaru adigalar
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை நிர்மாணித்த பங்காரு அடிகளார் காலமான நிலையில் சில காலம் முன்னர் அவரே அவருக்கு சமாதியை கட்டிக் கொண்டுள்ளார்.



செங்கல்பட்டு மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தலமாக இருந்து வருவது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில். இந்த கோவிலை பங்காரு அடிகளார் நிறுவினார். சுப்பிரமணி என்ற இயற்பெயர் கொண்ட பங்காரு அடிகளார் ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராக பணியாற்றி வந்தவர். ஆன்மீகம் மீது எழுந்த நாட்டத்தால் துறவியாக மாறியவர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் அம்மனாக தன்னையே அறிவித்துக் கொண்டார். அவரை அம்மா என்றே அனைவரும் அழைத்து வந்தனர். கோவிலுக்கு கிடைத்த வருமானத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பெண்கள் கல்வி பெற உதவினார்.

தற்போது பங்காரு அடிகளார் மாரடைப்பால் நேற்று காலமானார். ஆனால் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் பீடம் அருகே தனக்கான சமாதியை தானே கட்டியெழுப்பினார் பங்காரு அடிகளார். சாவை முன் கணித்து பங்காரு அடிகளார் சமாதி கட்டும் செயலை செய்ததாக பலரும் கூறி வருகின்றனர்.

Edit by Prasanth.K