வேலூரில் திமுக தோல்வி அடையும் என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறினாரா?
பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவுகளை மிகத் துல்லியமாக கணித்து கூறியதில் இருந்தே அவர் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்
ரஜினி அரசியலுக்கு வருவது உட்பட பல விஷயங்களை அவர் கூறியுள்ள நிலையில் தற்போது நாளை நடைபெறவிருக்கும் வேலூர் தொகுதியில் திமுக மிகப்பெரிய தோல்வி அடையும் என்றும், இதனால் துரைமுருகன் திமுகவிலிருந்து விலகுவார் என்றும் கூறியதாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது
ஆனால் இந்த செய்தியை ஜோதிடர் பாலாஜி ஹாசன் மறுத்துள்ளார். வேலூர் தொகுதி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே திமுகவைச் சேர்ந்த கதிர்ஆனந்த் அவர்கள் வெற்றி பெறுவார் என்று கூறி விட்டேன் என்றும், சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவ்வாறு கூறினேன் என்றும் யாரோ எனது புகைப்படத்தையும் எனது பெயரையும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரையும் வைத்து போட்டோஷாப் செய்துள்ளதாகவும், இந்த பொய்யான வதந்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்
மேலும் எனது பெயரை பலர் பயன்படுத்தி யூடியூப் சேனலில் கணிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அவை அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்