1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (16:19 IST)

வர்லாம், வர்லாம் வா... காத்துக்கொண்டிருக்கேன்: கிருஷ்ணசாமியை கலாய்க்கும் பாலபாரதி!

வர்லாம், வர்லாம் வா... காத்துக்கொண்டிருக்கேன்: கிருஷ்ணசாமியை கலாய்க்கும் பாலபாரதி!

அனிதாவின் தற்கொலைக்கு பின்னர் புதிய தமிழக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.


 
 
கிருஷ்ணசாமி குறித்து கடுமையாக விமர்சித்து வரும் பாலபாரதியின் வீடு மீதும், அவரது கட்சி அலுவலகம் மீதும் புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.
 
இதுகுறித்து பாலபாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், இன்று எங்களது இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தையும் வீட்டுக்கு முன்னாலும் புதிய தமிழகம் கட்சியினர் கலகம் செய்யப்போவதாக அறிவிப்புச்செய்துள்ளார்கள். பொய், கலகம் செய்யும். உண்மை, புரட்சி செய்யும். வர்ர்லாம் வர்லாம்... என கூறியிருந்தார்.
 
மேலும் இது தொடர்பாக பிரபல வார இதழ் ஒன்றின் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கலகம் செய்ய வருவார்கள் என காலையிலிருந்து காத்துக்கொண்டிருக்கிறேன். யாரும் வரவில்லை. காவல்துறைக்குத் தகவல் அளித்துவிட்டோம். பாதுகாப்புக்  கொடுத்துள்ளனர். அவர்கள் வந்தால், அவர்களுடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.