1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் ஆதரவற்றோர் தாயிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
மதுரை ஜெயந்திபுரம் சாலையோரம் வசித்த பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தையை வாங்கிய பாலச்சந்திரன், அவரது மனைவி மற்றும் போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 குழந்தைகள் பிறந்ததில் மூன்று குழந்தைகள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதனை அடுத்து மூன்று குழந்தைகளை போலி சான்றிதழ் மூலம் வளர்க்க கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.