திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:28 IST)

எய்ட்ஸ் தம்பதியின் குழந்தை ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை: பெண் புரோக்கர் கைது

திருச்சி அருகே எச்ஐவி பாதித்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை ஒன்றை ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொடுத்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
 
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த எய்ட்ஸ் பாதித்த ஒரு தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை விற்பதற்கு அந்த தம்பதியினர் முடிவு செய்தனர். இதனை அடுத்து அந்தோணியம்மாள் என்ற புரோக்கரை அணுகிய அந்த தம்பதியினர் ரூபாய் 1 லட்சத்து 35 ரூபாய்க்கு குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றனர். 
 
குழந்தையை வாங்கிய தம்பதியினர்களுக்கு பத்திரத்தில் எழுதி கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் குழந்தையை விற்றுக்கொடுதத்தற்கு அந்தோணியம்மால் இரு தரப்பிலும் கமிஷன் பெற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் எய்ட்ஸ் பாதித்த தம்பதியினரின் உறவினர் ஒருவர் கொடுத்த ரகசிய புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் உடனடியாக அந்தோணியம்மாள் கைது செய்து விசாரணை செய்தபோது அவர் குழந்தை வாங்கி கொடுத்ததை ஒப்புக்கொண்டார். குழந்தையை விற்ற, வாங்கிய தம்பதிகளையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதேபோல் வேறு யாருக்கும் குழந்தையை அந்தோணியம்மால் விற்பனை செய்ய உதவினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்