புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 31 மே 2020 (13:31 IST)

9 மணிக்கு கடத்தப்பட்ட குழந்தை 1 மணிக்கு மீட்பு: போலீஸார் அதிரடி

9 மணிக்கு கடத்தப்பட்ட குழந்தை 1 மணிக்கு மீட்பு
தமிழகத்தில் குழந்தை கடத்தல் என்பது அடிக்கடி நிகழும் சம்பவமாக உள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு இல்லாததால் எளிதில் குழந்தைகள் கடத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை கடத்தப்பட்டது. ஆனால் இன்று காலை 9 மணிக்கு கடத்தப்பட்ட குழந்தையை அதிரடி நடவடிக்கை எடுத்து போலீசார் மதியம் 1 மணிக்கு மீட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 9 மணிக்கு ஆண் குழந்தை ஒன்று நடத்தப்பட்டது. அந்த குழந்தையை கடத்திய பெண்ணை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது வீட்டில் பதுங்கி இருந்த பெண்ணை கைது செய்த போலீசார் குழந்தையை மீட்டனர்
 
இன்று காலை 9 மணிக்கு திருப்பத்தூர் மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை ஒரு சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து குழந்தையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்த நிலையில் போலீசாருக்கு அந்த குழந்தையின் தாய் நன்றி கூறியது பெரும் நெகழ்ச்சியாக இருந்தது