செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூன் 2020 (08:29 IST)

டெல்லியில் மீண்டும் நிர்வாணப் போராட்டம் – அய்யாக்கண்ணு அறிவிப்பு!

விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்யாவிட்டால் மீண்டும் டெல்லியில் விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்துவோம் என அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம், எலிக்கறி சாப்பிடுதல் உள்ளிட்ட போராட்டங்களை கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக நடத்தினர். அதன் பின் தேர்தல் சமயத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசிய அய்யாக்கண்ணு போராட்டங்களை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு ‘கடந்த தேர்தலுக்கு முன்பு விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யவேண்டும், இந்த கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.எங்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்றால், மீண்டும் டெல்லிக்கு சென்று விவசாயிகள் அனைவரு நிர்வாணப் போராட்டம் நடத்துவோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.