1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 மார்ச் 2025 (07:30 IST)

கோடை வெப்பத்தை தணிக்க பாராசிட்டமால் போடக்கூடாது: சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

paracetomol
கோடை வெப்பத்தை தடுக்க பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது என பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் பதிவாகி வரும் நிலையில், கோடைகால நோய்கள் மற்றும் தொற்றுகள் பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், வெப்பவாத பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெப்பத்தை குறைக்கும் நோக்கில் மருத்துவரின் பரிந்துரை இன்றி சில மாத்திரைகளை, குறிப்பாக பாராசிட்டமால் போன்றவற்றை, உட்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 
வெப்ப வாதம் ஏற்பட்டால் மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களை உடனே படுக்க வைத்து, தண்ணீர், இளநீர், மோர் ஆகியவற்றை வழங்கலாம். மேலும், வெப்பநீரில் நனைத்த துணியை உடலில் தடவுவது பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இன்றி உட்கொள்ளக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Siva