திங்கள், 20 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2024 (18:49 IST)

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

paracetomol
இந்தியாவில் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு பெரும்பாலானோர் பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள், இந்த மாத்திரைகள் உட்கொள்ள தகுதி இல்லாதவை என்று அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் அடிக்கடி பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்துவதால் இரைப்பை, குடல், இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 180,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நல தகவல்கள் ஆய்வு செய்யபட்டன. பாராசிடமால் மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.

ஆய்வின் முடிவுகளுக்கு ஏற்ப, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் நீண்ட காலமாக பாராசிடமால் பயன்படுத்தினால், நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்து 19%, இதய செயலிழப்பு சம்பவங்களில் 9% மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயம் 7% அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

 

Edited by Mahendran