சென்னையிலும் ஆட்டோ, டாக்ஸி இயங்கலாம்: ஆனால் ஒரு நிபந்தனை
சென்னையிலும் ஆட்டோ, டாக்ஸி இயங்கலாம்
இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது என்பது தெரிந்ததே. அவற்றில் ஒன்று சென்னை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் டாக்சிகள் இயங்கலாம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து கடந்த 23ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் ஆட்டோக்கள் டாக்சிகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆட்டோ டிரைவர்கள் சானிடைசர் வைத்திருக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும், ஆட்டோக்களில் கிருமி நாசினி அடிக்கடி தெளிக்கவேண்டும், ஆட்டோவில் ஒரே ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் விமான நிலையத்திலிருந்தும், ரயில் நிலையத்தில் இருந்தும் பயணிகள் தங்களுடைய இல்லத்திற்கு செல்வதற்கு ஆட்டோ டாக்சி இல்லாமல் அவதிப்படுவது குறித்து செய்திகள் வெளியானது. இதனைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு தற்போது ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு மட்டும் பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
மேலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஆட்டோ டாக்சி இயங்க அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சென்னைக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது