வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2023 (10:01 IST)

சென்னை, கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை என்ன்? இன்னும் குறையுமா?

Tomato
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
 
 இந்த நிலையில் கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் என விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில் இன்று தக்காளி விலையில் ஏற்ற இறக்கமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகமாக இருந்தாலும் விலை குறையவில்லை என்றும் நேற்றைய விலையில் தான் விற்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
Edited by Siva