டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம்
ஆலங்குளம் நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டமும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆலங்குளம் நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆம் தேதி விஜயகுமார் அந்தக் கடையில் ரூ.260 மதிப்புள்ள மது வாங்கியபோது, விற்பனையாளர் ரூ.265 க்கு ரசீது கொடுத்துள்ளார்.
மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விஜயகுமார் வாட்ஸ் ஆப் மூலம் புகாரளித்திருந்தார். இதையடுத்து, தற்போது விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.