1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (17:29 IST)

எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை, என்னை விட்டுவிடுங்கள்: ஆடி கார் ஐஸ்வர்யா

குடிபோதையில் கூலித் தொழிலாளி ஒருவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யா ஜாமின் மனுவில், தனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை, என்னை விட்டுவிடுங்கள் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.


 

 
சென்னை திருவான்மையூர் பழைய மகாலிபுரம் பகுதியில் முனுசாமி என்ற கூலித் தொழிலாளி சாலையை கடக்க முயன்ற போது ஆடி காரில் வந்த ஐஸ்வர்யா இடித்து கொலை செய்தார்.
 
அதில் ஐஸ்வர்யா என்பவர் குடிபோதையில் இருந்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தனக்கு ஜாமின் கோரியத்தில் நீதிமன்றம் ஜாமின் தர மறுத்து தள்ளுபடி செய்தது.
 
அந்த மனுவில் ஆடி கார் ஐஸ்வர்யா, நான் கணக்கு பாடத்தில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவள். எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. தேவையில்லாமல் என்னை சிறையில் அடைத்து விட்டனர். எனக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
 
இதையடுத்து தான் குடிபோதையில் காரை ஓட்டி வரவில்லை என்றும், யாரையும் இடித்து கொலை செய்ய வில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர். அதன் மூலம் அவர் குடி போதையில் காரை ஓட்டினாரா இல்லையா என்பது தெரிந்து விடும்.
 
அதன் பின்னரே வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.