புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (19:00 IST)

சிறுவர்களை மலம் அள்ள வைத்த கொடூரம்... மக்கள் போராட்டம்

சமீபத்தில் மத்திய அரசு,மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக்கூடாது என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி மனிதக் கழிவுகளை மனிதர்களை அள்ள வைப்பதோ சுத்தம் செய்ய வைத்தலோ தண்டனைக்குறிய குற்றம் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், இன்று பெரும்பலூர் மாவட்டம் சிறுகுடல் என்ற பகுதியில், விளையாட்டு மைதானத்தில் இருந்த  மலத்தை அங்குள்ள பட்டியலின் சிறுவர்களை அள்ள வைத்துக் கொடுமை செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதன்படி பட்டியலின சிறுவர்களை மலம் அள்ள வைத்த இளைஞர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.