1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 31 மே 2016 (09:06 IST)

ஒரே நேரத்தில் மூன்று தொகுதிகளுக்கு தேர்தல்: ராஜேஷ் லக்கானி தகவல்

ஒரே நேரத்தில் மூன்று தொகுதிகளுக்கு தேர்தல்: ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில், ஒரே நேரத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்தற்காக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்துள்ளார். அங்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல்விதி.
 
எனவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்
ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆனால், இது குறித்த இறுதியான மற்றும் உறுதியான முடிவை இந்திய தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும் என்றார்.