வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (16:29 IST)

கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதா! – இன்று சட்டப்பேரவையில் தாக்கல்!

கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதா! – இன்று சட்டப்பேரவையில் தாக்கல்!
அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு பணி நியமனமும் செய்யப்பட்டன. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கூட்டுறவு துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி முந்தைய கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார். இதனால் இன்று எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.