திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (07:47 IST)

பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: அதிகாரிகள் அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
மேலும் பெட்ரோல் பங்குகள் உள்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பெட்ரோல் பங்குகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் காலை முதலே இயங்க தொடங்கியுள்ளதால் மீண்டும் இயல்புநிலை திரும்பியுள்ளது.
 
மேலும் கருணாநிதி மறைவு காரணமாக தமிழக அரசு சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படுவதால் வரும் 14ம் தேதி வரை எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுவரை. தேசியக் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதே நேரத்தில் 14ஆம் தேதியுடன் துக்கம் முடிந்துவிடுவதால் வரும் 15ம் தேதி சுதந்திர தினம் வழக்கம்போல் கொண்டாடப்படும் என்றும் அன்றைய தினம் முதல்  அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.