1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (14:41 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடரும் கைது படலம்.! மேலும் 3 பேர் கைது..!!

Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  கடந்த 5 ஆம் தேதி ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்  முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடி திருவேங்கடம்,  ஜூலை 14ஆம் தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடி குண்டுகளை சப்ளை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

 
இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட இரண்டு ரவுடிகளை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.