ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (10:25 IST)

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம்: சிவ்தாஸ் மீனா தகவல்..!

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களிலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது என்றும், மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்,.

மேலும் காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது என்றும், மழை வெள்ள மீட்புப் பணிகளை சிறப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்,

சூலூர் விமான தளத்தில் இருந்து விமானம் மூலம் நிவாரண உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், தூத்துக்குடியில் மழைநீர் வடிய சற்று தாமதம் ஏற்படலாம் என்றும் கூறினார்,.

Edited by Mahendran