ரஜினிக்கு டூப்பாக இருக்க மாட்டேன்: வேறு ரூட் பிடித்த அர்ஜுன மூர்த்தி!
அரசியல் கட்சி நிறுவ வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு என அர்ஜுன மூர்த்தி பேட்டி.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்ததுடன் பாஜகவிலிருந்து வந்த அர்ஜுன மூர்த்தியை கட்சி ஆலோசகராக நியமித்தார். ஆனால் உடல்நிலை காரணமாக அவரால் கட்சி தொடங்க முடியாமல் போனது.
இதன் பிறகு தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு பேசியுள்ளார், ஒரு தலைவர் கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் யார் என்று உங்களால் கண்டறிய முடியவில்லை. ஒரு அரசியல் கட்சி நிறுவ வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. நேர்மையான தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுவேன்.
ரஜினிக்கு டூப்பாக நான் இருக்க மாட்டேன். நான் வளர்ந்த காலத்தில் எல்லா மதத்துக்கும் இடம் இருந்தது. அதை சிதையவிடாமல் காப்பாற்ற நான் பங்காற்றுவேன். ரஜினி ரசிகர்கள் என் மீது நம்பிக்கை இருந்தால் வரவேற்போம். பாஜகவுடன் கருத்து வேறுபாடு எனக்கு இல்லை. நான் பணியாற்றிய வரை சந்தோசமாக தான் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.