திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (21:32 IST)

துரத்தி வந்த மக்களை... ஓட ஓட விரட்டி அடித்த யானை ! வைரல் வீடியோ

ஒடிசா மாநிலத்தில் காராஞ்சியா என்ற வனப் பகுதியில் இருந்துயானைகளால் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த்தால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் காராஞ்சியா என்ற பகுதியில் சுற்றித் திரிந்த சுமார் 54  யானைகள் , அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. அதனால் கோபம் அடைந்த மக்கள் ஒன்று சேர்ந்து  யானைகளை விரட்டினர்.
 
ஆனால், யானைகள் நெற்பயிர்கள் விளைந்த வயலுக்குள் சென்று அதகளம் செய்தது. அதனால் மக்கள் பலர் கூட்டமாக சேர்ந்து கொண்டு அந்த யானைகளை விரட்டினர்.
 
உருவில் பெரிய யானை பதிலுக்கு துரத்தி வந்தவர்களைத் துரத்தியது. இதில் அலறியடித்த கூட்டம் வந்த வழியே ஓடிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.