பிரியாணி சாப்பிட்ட 15 பேருக்கு வாந்தி, மயக்கம்..! – அறந்தாங்கியில் பரபரப்பு!
அறந்தாங்கியில் கடை ஒன்றில் பிரியாணி வாங்கி சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கியில் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டின் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளார்.
தளம் போடும் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
அந்த பிரியாணியை சாப்பிட்ட சில நிமிடத்திற்குள் 15 தொழிலாளர்கள் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சித்திரைவேல் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரியாணி கெட்டுப்போனதா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.