புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (09:02 IST)

கிணற்றில் விழுந்து பலியான இளம்பெண்: சரவணன் - மீனாட்சி தொடர் காரணமா?

சமீபத்தில் சென்னை அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் அப்பு, மெர்சி ஆகிய இருவர் தவறி விழுந்ததில் மெர்சி என்ற இளம் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது 
 
சென்னையை சேர்ந்த ஆவடி என்ற பகுதியை அப்பு மற்றும் மெர்சி ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் இருவரும் உறவினர் என்பதால் திருமணத்திற்கு முன்னர் அடிக்கடி வெளியில் செல்லும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர்.
 
இதனை அடுத்து சென்னையின் புறநகர் பகுதிக்கு இருவரும் சென்ற போது அங்கிருந்த விவசாய கிணறு ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற போது இருவரும் தடுமாறிக் கிணற்றில் விழுந்தனர். அந்த நேரத்தில் விவசாயி ஒருவரின் புத்திசாலித்தனமான முயற்சியால் அப்பு மட்டும் காப்பாற்றப்பட்டார். மெர்சி கிணற்றின் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார் 
 
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் அப்புவிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் கொடுத்த வாக்குமூலம் பின்வருமாறு: நானும் மெர்சியும் வெளியே செல்ல முடிவெடுத்த போது தான் மெர்சி அந்த கிணற்றை காண்பித்து அதில் இறங்கி, சரவணன் மீனாட்சி தொடரில் வரும் காட்சியில் போல் நாமும் செல்பி எடுக்க வேண்டும் என்று என்னை கேட்டார். எனக்கு நீச்சல் தெரியாது என்று கூறியும் அவர் கட்டாயப்படுததால் இருவரும் கிணற்றில் இறங்கி செல்பி எடுக்க முயன்றோம். அப்போது மெர்சி படிக்கட்டில் கால் தவறி என்மேல் விழுந்ததால் இருவரும் தவறி கிணற்றில் விழுந்தோம். என்னைக் காப்பாற்றியது போல் மெர்சியையும் யாராவது காப்பாற்ற இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அப்பு கூறியுள்ளார்.
 
தொலைக்காட்சியில் வரும் காட்சிகளை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதேபோல் நாமும் செயல்பட வேண்டும் என்று நினைப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதும் இந்த சம்பவத்தில் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ளும் பாடம் ஆகும்