வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (12:11 IST)

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் எப்போது? முக்கிய தகவல்..!

2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிளஸ் டூ தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் மே 8-ம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் கல்லூரிகளில் சேர்வதற்கு தயாராகி வருவார்கள் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கான தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மே ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மே ஒன்பதாம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் தொடங்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva