விஜயால் மது அருந்தாமல் இருக்க முடியாதா? ட்ரெண்டாகும் அனுமோகன் வீடியோ
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி பிஸியக இருக்கின்றன. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள முக்கியத் தரப்பு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். முதல் தேர்தலை சந்திக்கும் விஜய்க்கு இந்த தேர்தல் களம் மிகுந்த கடினமாகவே இருக்கும். காரணம் அதிமுக திமுக என இரு பெரும் கட்சிகளின் ஆளுமையே.
அரசியல் களத்தில் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் உற்று நோக்கப்படுவதுடன், அவர் மீதான விமர்சனங்களும் பாய்ந்த வண்ணம் உள்ளன. ஒருகட்டத்தில் இந்த விமர்சனங்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்த அரசியல் சவால்களை நினைவுபடுத்துகின்றன. ஆனால் அதே சமயம் விஜய் மீதான தவறுகளும் இதற்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் அளித்த பேட்டி ஒன்று பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி அவர் முன்வைத்த குற்றச்சாட்டு என்னவெனில்
விஜய்யால் மது அருந்தாமல் இருக்கவே முடியாது. அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் கூட மது அருந்திவிட்டுதான் வந்து பேசுகிறார் என்று ஆதாரம் இல்ல்;ஆத குற்ற்ச்சாட்டை வைத்தார். முன்பு நடிகர் வடிவேலு, விஜயகாந்த் மீது வைத்த விமர்சனங்களுக்கு இணையான இந்த வார்த்தைகள், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சனாவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மூத்த நடிகர் அனுமோகன் முன்பு அளித்த பழைய பேட்டி ஒன்றை விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அனுமோகன் அந்த வீடியோவில் பேசியதாவது:-
எனக்கு அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஒருமுறை விஜய்யுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தபோது, அவர் நேரடியாக என்னிடம் வந்தார்."
எனக்கு சிகரெட் வாசனை சுத்தமாக ஒத்துக்காது. தவிர இது உங்கள் உடம்புக்கும் நல்லது கிடையாது. அதனால் முடிந்தவரை சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுங்கள் என்று மிகவும் அக்கறையுடன் அறிவுரை கூறினார். ஒரு சக நடிகரின் உடல்நலன் மீது அவர் காட்டிய அந்த உண்மையான அக்கறை என்னை மிகவும் நெகிழச் செய்தது என்று கூறியிருந்தார்.
சிகரெட் வாசனையே பிடிக்காத, சக நடிகரின் உடல்நலனில் அக்கறை கொண்ட ஒருவரைப் பார்த்து, மது அருந்தாமல் இருக்க முடியாது என்று கூறுவது முற்றிலும் உள்நோக்கம் கொண்ட அடிப்படை ஆதாரமற்ற அவதூறு என விஜய் ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கண்டனங்களை வலுவாகப் பதிவு செய்து வருகின்றனர்.