மதுக்கடைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்ட சமூக விரோதிகள்...!
மதுரையில் உள்ள ஒரு மதுக்கடைக்கு தீ வைத்து விட்டு சிலர் தப்பி ஓடிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளிலும் சமூக விலகலை பின்பற்றவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் அதிரடியாக சற்று முன் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய அரசியல் கட்சிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது
இந்நிலையில், மதுரையில் உள்ள ஒரு மதுக்கடைக்கு தீ வைத்து விட்டு சிலர் தப்பி ஓடிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதுக்கடை திறந்ததற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு தீ வைத்து விட்டு சில சமூக விரோதிகள் தப்பி ஓடிவிட்டனர்.