1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Another one ADMK celebrity may join DMK

திமுகவுக்கு ஜம்ப் அடிக்கும் மற்றொரு அதிமுக எம்.பி! – மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டம்!?

Tamilnadu
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அதிமுகவை சேர்ந்த எம்.பி ஒருவர் திமுகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் முன்னதாக பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது அதிமுக பிரமுகர் பரசுராமன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக சார்பில் நின்று முன்னாள் எம்.பியாக பதவி வகித்தவர் பரசுராமன். தற்போது இவர் திமுகவில் இணைய உள்ளதாகவும், இதற்காக மு.க.ஸ்டாலினை சந்திக்க அவகாசம் கேட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகள் ரத்து! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!