1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (23:53 IST)

தனியார் பைக் டாக்சிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்; ஆட்டோ டிரைவர் கைது

rapido
தனியார் பைக் டாக்ஸிக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் செய்த ஆட்டோ டிரைவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நாடு முழுவதும் தனியார் செயலிகள் மூலம் பைக் டாக்சி இயங்கி வருகிறது என்பதும் ஆட்டோவில் செல்வதை விட இதில் பாதிக்கும் குறைவான கட்டணம் இருப்பதால் பலர் இதனை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க கோரி பெங்களூர் ஆட்டோ டிரைவர்கள் இன்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் போராட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இது குறித்து ஆக்டோ டிரைவர்கள் கூறிய போது ரேபிடோ உள்ளிட்ட தனியார் பைக் டாக்ஸி காரணமாக எங்களுக்கு வருவாய் குறைந்துள்ளது என்றும் எனவே பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார். 
 
இந்த நிலையில் ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுனர் ஒருவரை ஆட்டோ டிரைவர் ஒருவர் கடுமையான தாக்கியதை அடுத்து ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
 
Edited by Mahendran