1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (19:46 IST)

மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில்  வரும் மக்களவை தேர்தலையொட்டி மக்கள் தங்கள் சொந்த  ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெறும்  தேதி அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி  நடைபெறவுள்ளது.
 
இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், தேர்தல் நாளன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஏப்ரல்19 ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்தார்.
 
இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் சென்ரு வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, தேர்தலையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் சென்று வாக்களித்திட வேண்டி, ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 2,970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.