வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (18:36 IST)

2022 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது மு.ராஜேந்திரனுக்கு அறிவிப்பு

m rajendar
2022 ஆம் ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருது மு.ராஜேந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் வெளியாகும்   சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளுக்கு சாகித்கிய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, காலாபாணி என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் மு, ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர், எழுதிய காலாபாணி என்ற  நாவல் காளையர் கோயில் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் ஆகும்.

எனவே, எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு தமிழ் எழுத்தாளர்கல், இலக்கிய ஆர்வலர்கல், வாசகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.