1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:05 IST)

கமலாலயத்தில் விசிக... வரவேற்கும் அண்ணாமலை!

திருமாவளவனின் இடது கை, வலது கை யாராக இருந்தாலும் பாஜக அலுவலகத்திற்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகத்தை வழங்கலாம் என அண்ணாமலை டிவிட்.

 
சென்னை பாஜக அலுவலகத்திற்கு சென்று விடுதலை சிறுத்தை கட்சி மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை அண்ணாமலைக்கு இன்று வழங்க உள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். 
 
அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, திருமாவளவனின் இடது கை, வலது கை யாராக இருந்தாலும் பாஜக அலுவலகத்திற்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகத்தை வழங்கலாம். மேலும் திருமாவளவன் சொல்லும் நாளில் விவாதத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

`அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றக் கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்!’ என்பதே விவாதத்தின் தலைப்பு என்று குறிப்பிட்டிருந்தார். பாஜக அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் வரக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது.