செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (14:55 IST)

இளைஞர்கள் பாஜக பக்கம்... அண்ணாமலை கணக்கு சரியா??

கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை என சமீபத்தில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேட்டி. 
 
தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை கர்நாடக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தமிழக அரசியலில் ஈடுபட போகிறார் என பேசிக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் தற்சார்பு விவசாயம் செய்து கொண்டு அது குறித்து பேசி வந்தார்.
 
இதனைத்தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பின்னர் தற்போது அவர் பேட்டியளித்துள்ளார் அதில், புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை. தமிழர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. 
 
அதேபோல, வரும் தேர்தலில் தமிழக இளைஞர்கள் அதிகமாக பாஜகவிற்கு வாக்களிப்பார்கள் என நம்ப்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவில் இருக்கும் பலர் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என உறுதியாக தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.